ஏதாச்சும் வீஷேஷங்களா?
வளைகாப்பு ஏழாவது மாசமே பண்ணிடனும். இல்லன்னா சிரமம் ஆயிடும்.
எல்லா வேலையும் நீயே செய்யுமா, அப்பதான் சுக பிரசவம் ஆகும்.
டாக்டர் சொன்ன சரியா தாங்க இருக்கும். கைரசியன டாக்டர் இவர். சீஸேரியேனே பண்ணிக்கலாம். இப்பல்லாம் இது சகஜமுங்க.
குழந்தைக்கு எல்லா சொட்டு மருந்தும் கொடுத்தாங்களா? இப்பெல்லாம் இந்த நர்சுகள் எம்மாத்திடுவாங்க.
எந்த ஸ்கூல சேத்த போறீங்க? இப்பெல்லாம் பேரெண்ட்சுக்கு கூட இண்டேருவியூ வெய்கிராங்க. யெல்.கே.ஜி. பீசே அம்பதாயிரம் கட்ட வேண்டி கிடக்கு.
உன் குழந்தை என்ன படிக்குது? பாரு அதுகுல வருஷம் ஓடிடுச்சு. எனக்கு அடயாளமே தெரியல. என்ன கண்ணு, இந்த அத்தைய தெரியுதா?
இப்ப உன் பையன் பத்தாவது தானே படிக்கறான்? நல்லா படிக்க சொல்லுங்க.இந்த ஒரு வருஷம் படிச்சா நல்ல க்ரூப் எடுத்துககலாம்.
என்னப்பா இது, பனிரெண்டாவது படிக்கற பையன் இருக்கற வீட்டில டீவீ அவசியமா? என் பொண்ணெ டீவீ வேண்டாம்னு சொல்லிட்டா தெரியுமா? தம்பி இந்த ரெண்டு வருஷம் எல்லத்யும் மறந்துட்டு படிச்ச, நல்ல காலீஜில ஸீட் வாங்கிடலாம், அப்புறம் என்ன நீ எஞ்சொய் பண்ணலாம்.
பரீட்சை முடிஞ்சச்சுணு இருக்க வேண்டாம். இப்போவே ஐ. ஐ.டி -க்கு ப்ரிபேர் பண்ண சொல்லு. இந்தியாவுலேயே சிறந்த காலேஜ்.
என்ன க்ரூப் எடுக்க போற? அதெல்லாம் வேண்டாம். இப்போ என்ன மாறி உலகம் மாறிட்டு இருக்கு. இப்போ போயி அந்த கோர்ஸ் எல்லாம் எடுத்துட்டு. நல்ல பணம் சம்பாரிக்க பார்பியா? இன்னும் விவரம் தெரியாத பிள்ளாயாவே இருக்க.
எந்த வருஷம் படிக்கரான்? அடேங்கப்பா, நல்லா இருந்தா சரி தான். நல்லா படிச்சா நல்ல இடத்துல வேலை கிடைக்கும். இங்க கேம்பச் இண்டேருவியூ என்ன என்ன கம்பனிகள் வருது? அப்படியா! நல்ல கம்பனி, நல்லா படிச்சா தான் அங்கெல்லாம் வேலை கிடைக்கும். கம்ப்யூடர் கோர்ஸ் எல்லாம் பண்ணு. இப்ப நேரம் வேஸ்ட் பண்ணாத, வாழ்க்கையின் முக்கியமான நேரம்பா இது.
படிப்பு முடிஞ்சுதா? எந்த கம்பனில வேலை கிடைச்சுது?
நல்லது நல்லது. வேலை கிடைச்சுடுச்சுனு அப்படியே இருந்துடாத. எம்.பீ.ஏ. அப்லை பண்ணிடு. அப்படியே ரெண்டு வருஷத்துல முடிச்சிட்டன்னா, இன்னும் பெரிய வேலை கிடைக்கும்.
இந்த வருஷம் சம்பள உயர்வு உண்டா? அவள்ளவுதானா. ரோம்ப கம்மியா இருக்கே. வேறு நல்ல வேலை கிடைக்குத்தானு பாரு. இந்த சம்பளம் எல்லாம் இப்ப பத்தவே பத்தாது.
இன்னும் வெளிநாடு போகலையா? எங்க வீடு பக்கத்துல அந்த பொண்ணு சேர்ந்து ஒரு வருஷம் தான் ஆச்சு, அதுக்குள்ள வெளினாடு போய்ட்டா, ரெண்டு லட்சமாம், சம்பளம். அவுங்க அம்மாவுக்கு பொண்ணு பெருமை பாடரதே தான் வேலை.
இந்த பொண்ணு செறிய இருக்கும். ரெண்டு பெரும் சேர்ந்து வெளிநாட்டிலியே ஸெட்ல் ஆயிடலாம். பின்ன பிரச்சினை இருக்காதுல.
கல்யாணம் சிறப்பா பண்ணிட்டீங்க. இனி என்ன கவலை உங்களுக்கு?
ஏதாச்சும் வீஷேஷங்களா?
குறிப்பு: இந்த கதை தீபன்து.
Tuesday, February 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)

good start! wishes to rock on!:)
ReplyDeletereally a very good story .........Credits to DEEPAN ........KEEP ROCKING da........
ReplyDelete